திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து (30.10.2022)-ம் தேதி முதல் (05.11.2022),-ம் தேதி வரை சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 12 நபர்களை TNP Act – ன் கீழ் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 182 பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.