தூத்துக்குடி: மணியாச்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. நவநீதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒட்டநத்தம் சங்கம்பட்டி ஜங்ஷன் வந்து கொண்டிருந்த இரண்டு டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சரள் மணல் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மணியாச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. நவநீதன் வழக்குப்பதிவு செய்து அந்த டிராக்டர்களின் ஓட்டுநர்களான சங்கம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மகாராஜன் 31. மற்றும் சமுத்திரம் மகன் தனசேகரன் 38. ஆகியோரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு யூனிட் சரள் மணலும் 2 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.