திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரியான கந்தசாமி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் (29.01.2026) தீர்ப்பளித்த மதிப்பிற்குரிய நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளி கந்தசாமிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூபாய் 1,000/- அபராதமும் விதித்தது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதல் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை மணப்பாறை காவல் நிலைய போலீசார் முறையாக விசாரித்து, வலுவான சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் விளைவாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு, பொதுமக்கள் மத்தியில் சட்டத்தின் மீது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.
















