தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த சின்னதுரை (27).அபிஷேக் (20). திசையன்விளையைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (24). மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (24). ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நால்வரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















