நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில், காவல் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு 6 இடங்களில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 18 கிராமங்களில் இருந்து சுமார் 430 பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு 146 மனுக்களை அளித்தனர் மற்றும் அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அம்மனுக்கள் அனுப்பப்பட்டது.