காஞ்சிபுரம் :உத்திரமேரூர் ஒன்றியம், அன்னாத்துார் கிராமத்தைச் சேர்ந்த ஹரி- – கனகவல்லி தம்பதியின் (6) வயது குழந்தை ராஜேஷ். கடந்த 7ம் தேதி மதியம் தன் வீட்டின் முன்பாக குழந்தை ராஜேஷ் விளையாடி கொண்டிருந்தான்.அப்போது, சாலவாக்கத்தில் காவலராக பணியாற்றும் விஜயன், (34). என்பவர், அன்னாத்துாரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.எதிர்பாராத நேரத்தில் குழந்தை காவலரின் வாகனத்தில் சிக்கியது. செங்கல்பட்டு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தது
போலீஸ் விசாரிக்கின்றனர்.