தூத்துக்குடி: கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள திருச்செந்தூர் சப்டிவிசன் போலீசார் பயன்பெறும் வகையில் என்ஜிஎம் மார்க்கெட்டிங் சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான குளுக்கோன் டி, மாஸ்க் உள்ளிட்டவைகளை நிறுவன
உரிமையாளர் மரகதம் நமச்சிவாயம், திருச்செந்தூர் ஏஎஸ்பியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் சதீஸ், கார்த்திக், வஉசி நற்பணி மன்றம் நிறுவன தலைவர் இசக்கிமுத்து, தலைவர் சுந்தர், துணை செயலாளர் பொன் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.