திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.அருண் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் இந்த போதை மாத்திரைகளை கைப்பற்றினர். இந்த மாத்திரைகள் அனைத்தும் போதை பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
திருச்சியில் சமீபகாலமாக மாத்திரைகளை தூளாக்கி அதனை ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகமானதால் மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைத்து போதை ஆசாமிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, 5 பேரிடம் கோட்டை காவல் நிலையத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.ஜீவா நகர் குடோனுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி இந்த மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வைத்து விற்பனை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் வேறு யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள் என்பதை திருச்சி மாநகர துணை ஆணையர் திரு.அருண் சக்திவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.