நீலகிரி : நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது சந்தேகப்படும்படி வந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருப்பது தெரிந்தது. போதைப்பொருளை பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேரள வாலிபர் சம்ஷீர் (32) என்பவரை கைது செய்தனர்.