நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.யாதவ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள் திருட்டு குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
போலீசார் கூறும்போது போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் உடல் நலம் கெடுதல் வருவாய் இழப்பு ஏற்படுதல, நினைவுத்திறன் பாதிப்பு குற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகிறது. மேலும் தங்களது பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் அல்லது குற்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றனர்.