திருநெல்வேலி: கடந்த 2021 -ம் ஆண்டு வைராவிகிணறு பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் 28. என்பவர் இரண்டு சிறுமிகளிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளி சரண்ராஜ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்து குற்றவாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 31.10.2022 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் 2 போக்சோ வழக்கின் குற்றவாளியான சரண்ராஜ்க்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.