தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன்(50) என்பவர் கடந்த 26.05.2021 அன்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் எதிரியான மாரியப்பன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. விமலா அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் எதிரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் எதிரி மாரியப்பனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.