திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(72). இவர், கடந்த 2021ஆம் ஆண்டு 5 மற்றும் 6 வயது கொண்ட இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அதில், ஒரு சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சுப்பிரமணியனை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுப்பிரமணியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சண்முகம் (CWC) அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார், காவல் ஆய்வாளர்கள் வனிதா, ராதா (தற்போது தாம்பரம் குற்றப்பிரிவு) தலைமை பெண் காவலர் சந்தோஷ செல்வி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசன்னகுமார், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















