திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் போஸ்ட், அம்பலபதி, வீரபாகுபதி சுனாமி காலனியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் கிளட்சன் ராஜ் 31. என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் மீது வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. யோகேஷ்குமார் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் 01.11.2022 இன்று அடைக்கப்பட்டார்.