திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த இசக்கியப்பன் மகன் ஹரிகோபால கிருஷ்ணன் (27) போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சாந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசண்ண குமார், இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், (05.02.2026) அன்று குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















