திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் (12.03.2026) அன்று அன்சாரி (35). என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினரின் துரித நடவடிக்கையால், வழக்கு பதிவு செய்யப்பட்ட ஐந்து நாட்களிலேயே இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து வேலை நாட்களில், நீதிமன்ற விசாரணை முழுமையாக முடிவடைந்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் (10.04.2026) அன்று குற்றவாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 28,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டது .
இந்த வழக்கில் 29 நாட்களுக்குள் மிகத்துரிதமாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்று தருவதற்கு, சிறப்பாக கண்காணிப்பு செய்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சண்முகம் (CWC), நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், தர்ஷிகா நடராஜன், காவல் ஆய்வாளர், சுதா, பெண் தலைமை காவலர், வளர்மதி, ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார்,இ.கா.ப., வெகுவாக பாராட்டினார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தீவிரமான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















