நீலகிரி : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சரவணகுமார், தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 5 பேருக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. நேற்று மேற்கொண்ட சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.24 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மீறிய வாகன ஓட்டிகள் 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.