திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (04-02-2026) அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 18 நபர்கள் அளித்த புகார் மனுக்களை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ.மணிவண்ணன் இ.கா.ப., பெற்றுக்கொண்டு அவர்களது புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மற்றும் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்தார். இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள் மரு.சி.மதன் இ.கா.ப.,(மேற்கு), S.விஜயகுமார் (தலைமையிடம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















