திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஊரக பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் குறைகளை புகார் மனுவாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 07-12-2022 ம் தேதியன்று, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்களிடம் புகார் மனுக்களை நேரடியாக அளித்து நிவாரணம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. என்பதை திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.