திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று (06.11.2024) நடைபெற்ற இம்முகாமில் திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., பொதுமக்கள் 12 பேரிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று அதன் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி கூறினார். இம்முகாமில் மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, S.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்