இராமநாதபுரம் : மதுரை-இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் குறித்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல்நிலைய சரகம் மாடக்கொட்டான் பகுதியில் பைக் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட 1)விஜய் மற்றும் 2)பவித்திரன் ஆகிய நபர்கள் மீது கேணிக்கரை காவல்நிலைய குற்ற எண் 486/23 U/s.279,336 IPC and 184,188 MV Act பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் பைக் வீலிங் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.மேற்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று பைக் வீலிங் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.