தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி விவேகானந்தா நகர் சேர்ந்தவர் டால்பின் 35. மீனவரான இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழகி தனது வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அச்சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.வனிதா வழக்குப்பதிவு செய்து டால்பினை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.















