தூத்துக்குடி: தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் ஜோசப் 40. இவர் வீடுபுகுந்து 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமதி.ஜெயந்தி, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ஜோசப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.