திண்டுக்கல்: கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி மற்றும் காவலர்கள் கள்ளிமந்தயம் அடுத்த நீலக்கவுண்டனூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கோயம்புத்தூரில் இருந்து மதுரைக்கு சென்ற பேருந்தில் சோதனை மேற்கொண்ட போது பேருந்தில் மதுரையை சேர்ந்த நாகாஅர்ஜுன்(26). என்பவர் கஞ்சா கடத்தி செல்வது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் நாகாஅர்ஜுனை கைது செய்து அவரிடமிருந்து 3.1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















