திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் படி மாநகர தலைமையிட துணை ஆணையர், G.S.அனிதா, மாநகர ஆயுதப்படையில் தயார் நிலையில் உள்ள பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்ட பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களையும் ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார். மேலும் அவர் கூறும்பொழுது வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மின்சாரம் சம்பந்தமான பொருட்களை கையாளும் போதும், வெளியில் செல்லும் போதும் கவனமுடன் இருக்கவும், ஆறு, குளம் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்