திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் கடந்த 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், பொதுமக்களை அரிவாளால் வெட்டியதில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிநாத் கட்டா (45). பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜான் மார்க் (45) ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக நான்குனேரியைச் சேர்ந்த முருகன் மகன் சுப்பையா (19). பன்னீர்செல்வம் மகன் அந்தோணி மைக்கேல் ராஜா (19). நெடுங்குளம் முருகன் மகன் வசந்தகுமார் (21). நான்குனேரி நம்பிநகர் முத்தையா மகன் ராஜா (19). தென்னிமலை சுடலைகண்ணு மகன் கண்ணன் (21). அதே பகுதி சுடலைக்கண்ணு மகன் கல்யாணி (20). வள்ளியூர் ஆண்டி மகன் உச்சிமாகாளி (20). ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நாங்குநேரி காவல் ஆய்வாளர், சுப்பிரமணியன் அளித்த அறிக்கையை ஏற்று, 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு.வி.பிரசன்னகுமார், இ.கா.ப., பரிந்துரைத்தார். அதன் பேரில், ஆட்சியர் இரா. சுகுமார் உத்தரவின்படி, மேற்கூறிய 7 நபர்களும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















