தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூலியக்கோட்டை கிராமம் மேலத்தெருவில் வசித்து வரும் விவசாயி சிவலிங்கத்தின் மகளான கனகவல்லி 30. திருமணமாகாதவர் கடந்த 25-10-2021 அன்று சூலியக்கோட்டை வயல் வெளியில் தனது ஆடுகளை மேய்க்க சென்றவர்.
அரைகுறை ஆடைகளுடன் அப்பகுதியில் உள்ள குமுளி வாய்க்கால் அருகில் இறந்து கிடப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததை தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த பெண் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து அந்த இளம் பெண் சில மர்ம நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனும் தகவல் அறிந்த தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா காந்தபுனேனி ஐபிஎஸ் அவர்கள் இக் கொடுரமான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்க தஞ்சை தனிப்படை போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் தொடர்ந்து தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மோகன், தலைமை காவலர் திரு. உமாசங்கர் மற்றும் காவலர்கள் திரு.அருண்மொழி, திரு.அழகு ,திரு.சுந்தரம், திரு.நவீன், திரு.சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார்கள் கொலைக் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று (27-10-2021) வந்த ரகசிய தகவலின் படி ஒரத்தநாடு அருகே ஒளிந்திருந்த முதல் குற்றவாளியான சூலியக்கோட்டையை சேர்ந்த மேலத்தோப்பு தங்கராசு மகன் பெரியசாமியை 29. தஞ்சை தனிப்படை போலீசாரும், இரண்டாவது குற்றவாளியான சூலியக்கோட்டை மெயின் ரோடு மதியழகன் மகன் சதீஸ்குமாரை 20. அம்மாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு முத்து குமார் மற்றும் அவரின் டீம் சூலியக்கோட்டையில் வைத்து கைது செய்தனர்.
மேலும் குற்றவாளிகள் இருவரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள்
அப்போது அவர்கள் கூறியது குமுளி வாய்க்காலில் நாங்கள் இருவரும் மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும் அப்போது ஆடு மேய்த்து கொண்டிருந்த கனகவல்லியை பார்த்த அவரை அடைய ஆசைப் பட்டதாகவும்.
அதற்கு அவர் இணங்கவில்லை என்பதால் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் அதன் பின்னர் எங்களை காட்டி கொடுத்து விடுவாரே என்று பயத்தின் காரணமாக அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்கள்.
அப்போது குற்றவாளிகள் திடீரென்று தாங்கள் தப்பிக்க அருகிலுள்ள பள்ளத்தில் குதித்த போது இருவரின் கால் எழும்புகள் முறிந்து விட்டதால் தற்போது காவல்துறை பாதுகாப்புடன் தஞ்சை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்