கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக சென்றதைப் பார்த்த அங்கு பணியில் இருந்த நேசமணி நகர் காவல் நிலையைத்தை சேர்ந்த பெண் தலைமை காவலர் திருமதி. சரஸ்வதி அவர்கள் உடனடியாக சென்று புடவையை போர்த்தி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார். அவரது இந்த நற்செயலை பாராட்டும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D. N.ஹரிகிரண் பிரசாத் IPS அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அந்த பெண் காவலரை நேரில் வரவழைத்து அவரது சேவையை பாராட்டினார்.