திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக் கருங்குளம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநில பெண்ணிடம், சிவசக்தி நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் சதீஷ் (24). உல்லாசநகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் உத்தமராசு (19). ஆகியோர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து 2 இளைஞர்களையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















