குமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே செம்மங்காலை பகுதியில் பெட்டிக்கடையில் கணேசன் மனைவி கிருஷ்ணம்மாள் உடகார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பெண் உள்பட 2 பேர் வந்தனர்.
மோட்டார் சைக்கிளில் ஆண் உட்கார்ந்து இருக்க ஹெல்மெட் அணிந்த பெண் கீழே இறங்கி பெட்டிக்கடைக்கு வந்த. அவர் பழம் வாங்குவது போல் நடித்து கிருஷ்ணம்மாள் கழுத்தில் கிடந்த 6½ பவுன் சங்கிலியை பறித்தார். உடனே அவர் மோட்டார் சைக்கிளில் ஏறிசென்றார். உடனே கிருஷ்ணம்மாள் திருடன்… திருடன்… என்று கூச்சல் போட்டார். அவர்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்து விட்டனர். போலீசில் புகார் செய்யப்பட் டது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் நேரில் வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.