திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, ரஹ்மத் நகரை சேர்ந்த கஸ்தூரி(62). என்பவர் (25.10.2024)ஆம் தேதி வீட்டின் அருகில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முற்பட்டபோது தடுத்ததில் செயினின் ஒரு பகுதியான சுமார் 13.7 கிராமை அந்த நபர் பறித்து கொண்டு சென்றதாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாளை குற்றப்பிரிவு காவல் துறையினர் இது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்