தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலா் திருமதி.ரெங்காலட்சுமி மற்றொரு தலைமைக் காவலா் திருமதி.கனகலட்சுமியுடன் கூடுதல் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது,
தகராறில் ஈடுபட்டிருந்த இரு தரப்பிரனரை எச்சரித்து கலைந்து போகும்படி கூறினராம். மேலும், அவா்களில் பைக்கில் ஏறிச்செல்ல முயன்ற ஒரு இளைஞரை விசாரிக்கும்பொருட்டு தடுத்து நிறுத்தினராம்.
அந்த இளைஞா், இரு தலைமைக் காவலா்களையும் அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றாராம். இதுகுறித்து, பெண் போலீசார் இருவரும் நேற்று அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி அன்பரசு 21 என்பரை கைது செய்தனர். மேலும் அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனா்.