திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் கிராம் பகுதியில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகள் பாதுகாப்பு குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டம், காவல் உதவி செயலி பற்றி தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி இன்று பாளையஞ்செட்டிகுளம் அருகே உள்ள குளத்து பகுதியில் நூறு நாள் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மற்றும் முதியோருக்கு பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மைய இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.