திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனிவிஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஜெயச்சந்திரன் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த, கேடயம் திட்டத்தின் விழிப்புணர்வு பேரணி திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை திருவெறும்பூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ்குமார் அவர்களும், திருச்சி மாவட்ட ஆயுதப் படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.முகமது ரபிக் அவர்களும் பேரணியை தொடங்கி வைத்தார்கள். பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தலைக்கவசம் உயிர்க்கவசம், வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், சாலை போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும், வாகனத்தில் செல்லும் போது கைபேசியை பயன்படுத்தக் கூடாது என்பதை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குடும்ப வன்முறை, வரதட்சனை, பணியிடத்தில் பெண்களுக்கான பாலியல் தொல்லை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்தும். பொதுமக்களுக்கு கேடயம் திட்டம் தொடர்பான அச்சிடப்பட்ட தாள்களும் வழங்கப்பட்டு, கேடயம் திட்டத்தின் உதவி எண்; 9384501999, 6383071800 குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் வரவேற்றார். காவல் ஆய்வாளர் திருமதி.அமுதாராணி,அம்பிகா, யசோதா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் திருமதி. முத்துக்கண்ணு, முசிறி காவல் ஆய்வாளர் திருமதி. லெட்சுமி, மணப்பாறை காவல் ஆய்வாளர் திருமதி.மண மல்லி’ லால்குடி காவல் ஆய்வாளர் திருமதி.பழனியம்மாள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பிரபு, WDPS இயக்குனர் சீதா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் முகக்கவசம், தண்ணீர்பாட்டில், பிஸ்கட்கள் வழங்கப்பட்டது.