திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள நடுபட்டியில் 28.08.2020 ம்தேதி பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமொழியன் அவர்கள் அப்பகுதி பொதுமக்களை சமூக இடைவெளியில் நிற்கவைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுப்பது குறித்தும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற அறிவுரைகளை எடுத்துக் கூறும் படியும், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்களை தைரியமாக காவல் நிலையம் சென்று புகார் வழங்கும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா