கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது (06.04.2026) ஆம் தேதி அதிகாலை சுமார் 03.30 மணியளவில் ராயக்கோட்டை மேம்பாலம் TO கிருஷ்ணகிரி டோல்கேட் செல்லும் வழியில் அமைந்துள்ள ஜே.பி. பெட்ரோல் பங்க் அருகே பாரத் ரேடியேட்டர் பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து ரூ.1,20,000/- மதிப்பிலான ரேடியேட்டர்களை திருடி டாட்டா ஏசி வாகனத்தில் வைத்துக் கொண்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் அதே வழியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த நபர்களை அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக கூறியதால் அவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் அவர்கள் ரேடியேட்டர் பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து ரேடியேட்டர்களை திருடியது தெரிய வந்த நிலையில் மூன்று குற்றவாளிகளையும் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















