சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட 27-வது துணை கண்காணிப்பாளராக ப.நிரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது பொதுமக்களின் மனுக்களை உடனடியாக தீர்வு காண்பதில் வல்லமை பெற்று சிறப்பாக பணி புரிந்தார். அது மட்டும் இல்லாமல் பொதுமக்கள் அன்பையும் மற்றும் சக காவல் ஆளிநர்கள் அன்பையும் பெற்றவர் தென் மண்டல காவல்துறை தலைவர் மற்றும் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியவரிடம் கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்று பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி