திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலசெவல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட, கீழ ஓமநல்லூரில் காவல் உதவி ஆய்வாளர், வள்ளிநாயகம் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த சீனி கார்த்திக்(35). என்பவர் வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து சீனி கார்த்திக்கை கைது செய்து
அவரிடமிருந்து சுமார் 17 கிலோகிராம் புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















