திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, மேல இலந்தைகுளம் அய்யனார் ஊத்து, வடக்கு தெருவை சேர்ந்த வெயில்துரை (27). என்பவர் கடையை சோதனை மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து வெயில்துரையை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 4 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















