திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் திரு.ரெங்கசாமி, மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (30) என்பவரின் கடையை சோதனை செய்தனர். அப்போது, கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. சுடலைகண்ணுவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 900 கிராம் புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.