திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நித்யா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற மணிகண்டன் (27). மற்றும் சபரி பாண்டி (29). இருவரையும் சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 33 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தார்.




















