திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், சத்யா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில், அய்யனார்குளம் விலக்கு அருகே நின்று கொண்டிருந்த வி.கே.புரத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (72). என்பவரை சோதனை செய்து பார்த்த போது, அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல் உதவி ஆய்வாளர், வழக்கு பதிவு செய்து கோபால கிருஷ்ணனை (14.02.26) அன்று கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















