வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காடுபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் 2.0 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், முத்து ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் சரவணக்குமார் , சுகாதார ஆய்வாளர்கள்,ராம கிருஷ்ணன், மணிகண்டன் சதீஸ், புவனேஸ்வரன், மற்றும் ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேரணி நடத்தினர். இறுதியில் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் புகையிலை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது