தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில்.
நேற்று (31.07.2021) தூத்துக்குடி வடபாகம், மத்தியபாகம், தென்பாகம், ஆகிய 21 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 26 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 435 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.