தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முக்கானியைச் சேர்ந்த பொன்னு நாடார் என்பவரின் மகன் மாசானமுத்து (55 வயது) என்பவர் தனது தூரத்து உறவினரான 15 வயது சிறுமியை கடத்தி வந்து இராமேஸ்வரத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண்: 09/2019 U/s.366 IPC & 6 r/w 5(1) 8 of POCSO Act.-ன் பிரகாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து 15.07.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி திருமதி.சுபத்ரா அவர்கள் மேற்படி எதிரியான மாசானமுத்து என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை