விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து (28), விஜய் (23). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த (28.2.2018) அன்று (14) வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து காளிமுத்து, விஜய் ஆகிய 2 பேருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.