திருநெல்வேலி: திருநெல்வேலி, பெருமாள்புரம், அன்பு நகர், T.N.H.B காலனியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் மாரியப்பன்(38). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்தியுள்ளார். பாலியல் குற்றவாளி மாரியப்பனை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) காவல் உதவி ஆணையர் N.சுரேஷ், (பாளையங்கோட்டை சரகம்). காவல் ஆய்வாளர் R.கோமதி,(அனைத்து மகளிர் காவல் நிலையம்) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., ஆணைப்படி (15.09.2025)-அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்