திருச்சி: திருச்சியில் இன்று 10.08.2021 செவ்வாய்கிழமை பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு கடையை ஆய்வு செய்தபோது.
அந்த கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
மேலும் அவர் வீட்டை ஆய்வு செய்தபோது சுமார் 125 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்டு வழக்கு தொடுப்பதற்காக 6 சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.