திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பழனி நகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று (27.01.2026) பழனி நகரவை மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RDO), வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர், பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி முதல்வர், பழனி நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
இப்பேரணியில் பழனி நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 350 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பேரணி பழனி நகரவை மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கி மயில் ரவுண்டானா வரையில் சென்று மீண்டும் நகரவை மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பழனி நகர் அரிமா சங்கம் உறுப்பினர்கள், பழனி நகர பிரண்ட்ஸ் அரிமா சங்கம் உறுப்பினர்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள், மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசகப் பெருமக்கள் ஆகியோர் திரளாக பங்கு கொண்டு பேரணியை சிறப்பாக நடத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















