திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பறக்கும் படை சோதனை அலுவலர் மருதமுத்து தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் மற்றும் போலீசார் செட்டி நாயக்கன்பட்டி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை கண்டதும், சம்பந்தப்பட்ட நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 69 மதுபான பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தார் பிரேம்குமாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















